பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்

Posted On: 01 JUL 2024 6:02PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் குடும்ப ஓய்வூதியக் குறைகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார்.

தேச நிர்மாணப் பணியில் ஓய்வூதியதாரர்கள் சம பங்குதாரர்கள் என்று வர்ணித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். எளிதாக ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் ஓய்வூதியதாரர்களைக் கௌரவிப்பது நமது கடமை என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உணர்திறனுடன் முடிவுகளை எடுத்துள்ளதாக   டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் கணிசமான எண்ணிக்கையை புறக்கணிக்க முடியாது என்றும், ஓய்வூதியம் சமூக-பொருளாதார தாக்கத்தை உருவாக்குகிறது, இதனால் அவர்கள் கண்ணியத்துடன் வாழ அதிகாரம் அளிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் தது துறை எடுத்த முயற்சிகளை எடுத்துரைத்தார். CPENGRAMS இணையதளத்தில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதிய வழக்குகளை உரிய நேரத்தில் தீர்ப்பதற்கான ஒரு மாத கால சிறப்பு முகாம் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நீடிக்கும். 46 துறைகள் / அமைச்சகங்களின் 1891 குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைகள் முகாமிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2030058)

PKV/AG/RR



(Release ID: 2030201) Visitor Counter : 17