உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில் ஹரியானா மாநில அரசு மற்றும் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது - இந்த ஒப்பந்தம் மூலம் ஹரியானாவில் குற்றவியல் நீதி அமைப்பு பலப்படுத்தப்படும்
प्रविष्टि तिथि:
29 JUN 2024 5:42PM by PIB Chennai
ஹரியானா மாநில அரசு மற்றும் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில் இன்று (29.06.2024) கையெழுத்தானது. இந்த ஒப்பந்த்த்தின் மூலம் ஹரியானா மாநிலத்தில் குற்றவியல் நீதி அமைப்பு மேலும் வலுவடையும். மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம், ஹரியானாவின் குற்றவியல் நீதி அமைப்பில் அறிவியல் அடித்தளம் வலுவடையும் என்றார். புதிய குற்றவியல் சட்டங்களின்படி, 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு தடய அறிவியல் நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இது நாடு முழுவதும் தடய அறிவியல் நிபுணர்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் தேவையை இந்தப் பல்கலைக்கழகம் பூர்த்தி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 9 மாநிலங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும், இந்தப் பல்கலைக்கழக செயல்பாடுகளை நாட்டின் 16 மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். இது இத்துறையில் பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குவதோடு, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் வேகத்தை விரைவுபடுத்தவும், தண்டனை விகிதத்தை மேம்படுத்தவும் உதவும் என்று திரு அமித் ஷா கூறினார்.
*****
ANU/SMB/PLM/KV
(रिलीज़ आईडी: 2029537)
आगंतुक पटल : 126