ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகளிர் சுய உதவிக் குழுக்களை சேவைத் துறை நிறுவனங்களில் ஒருங்கிணைப்பதன் மூலம் 'லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குதல்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது

Posted On: 28 JUN 2024 5:54PM by PIB Chennai

3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீன்தயாள் அந்த்யோதயா  யோஜனா – தேசிய  ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், ‘மகளிர் சுய உதவிக் குழுக்களை சேவைத் துறை நிறுவனங்களில் ஒருங்கிணைப்பதன் மூலம் 'லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குதல்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கைத் தொடங்கிவைத்துப் பேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங், லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கு சேவைத் துறை நிறுவனங்களை  ஒருங்கிணைப்பதும் வாய்ப்புகளைக் கண்டறிவதும் இதன் நோக்கம் என்றார்.  உள்நாட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்திற்கும் வேலைவாய்ப்பில் 31 சதவீதத்திற்கும் சேவைத்துறை தற்போது பங்களிப்பு செய்வதாகக் குறிப்பிட்ட அவர், சுயஉதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களை லட்சாதிபதி சகோதரிகளாக உருவாக்குவதற்கும் எந்த வகையான துணைத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்பது குறித்து மனம் திறந்த விவாதத்தை நடத்துவது மிக முக்கியமானது என்றார்.

இந்தப் பயிலரங்கில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணைச் செயலாளர் திருமதி சுவாதி சர்மா பேசுகையில், தேவை அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்துவதற்கான நேரம் வந்துள்ளது என்றும் இதற்கு இந்தப் பயிலரங்கில் பங்கேற்றுள்ள பலதரப்பினரும் வழிகாட்டி, பயிற்சி அளித்து சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் லட்சாதிபதிகளாக மாறுவதற்கு உதவி செய்வார்கள் என்றும் கூறினார்.

இன்றைய பயிலரங்கில் 11 அமைச்சகங்கள் 10 மாநிலங்களில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்கங்கள், தேசிய ஆதாரவள அமைப்புகள், தொழில்நுட்ப உதவி முகமைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029358

***

SMB/KPG/DL


(Release ID: 2029377) Visitor Counter : 74