நிதி அமைச்சகம்
சிங்கப்பூரில் நடைபெற்ற முழு அமர்வில் இந்தியாவின் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையை நிதிச் செயல்பாட்டு பணிக்குழு ஏற்றுக் கொண்டது
प्रविष्टि तिथि:
28 JUN 2024 3:06PM by PIB Chennai
நிதிச் செயல்பாட்டு பணிக்குழுவால் 2023-24 காலகட்டத்தில் நடத்தப்பட்ட பரஸ்பர மதிப்பீட்டில், இந்தியா சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் 2024 ஜூன் 26 முதல் 28 வரை நடைபெற்ற பணிக்குழுக் கூட்டம், இந்தியாவின் பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கையை ஏற்றுக் கொண்டது. ஜி-20 நாடுகளில் நான்கு நாடுகள் மட்டுமே தொடர்ச்சியான பின்பற்றல் வகையில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளன. இவற்றில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இது கறுப்புப் பணம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தலை முறியடிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக கருதப்படுகிறது.
ஜன்தன், ஆதார், செல்பேசி என்ற முப்பரிமாணக் கொள்கை அமல்படுத்தப்படுவதன் காரணமாக, பணப்பரிவர்த்தனைகளுக்கு கண்டிப்பான விதிமுறைகள் உள்ளன. இது அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் வழி வகுக்கிறது. இந்த நடவடிக்கைகள், பரிவர்த்தனைகளை அடையாளம் காணக்கூடியதாக அமைவதால், கருப்புப் பணம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கும் அபாயத்தைக் குறைத்துள்ளது.
கடந்த 2 ஆண்டு காலத்தில் நிதிச் செயல்பாட்டு பணிக்குழுவின் பரஸ்பர மதிப்பீட்டு நடைமுறையில், இந்தியாவை ஈடுபடுத்துவதில் வருவாய்த்துறை முன்னிலையில் உள்ளது. பல்வேறு அமைச்சகங்கள், தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலகம், அரசு அதிகாரிகள், நீதித்துறை, நிதித்துறை ஒழுங்கமைப்பாளர்கள், சுயகட்டுப்பாட்டு அமைப்புகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் சிறப்பான முயற்சிகளும் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
நிதிச் செயல்பாட்டு பணிக்குழு என்பது 1989-ம் ஆண்டு நிறுவப்பட்ட அரசுகளுக்கு இடையேயான அமைப்பாகும். இது கருப்புப் பண ஒழிப்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை முறியடித்தல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் அமைப்பாக செயல்படுகிறது. இதில் 2010-ம் ஆண்டு இந்தியா உறுப்பினரானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029297
----
MM/SMB/KPG/RR
(रिलीज़ आईडी: 2029328)
आगंतुक पटल : 160