சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் தர ஆரோக்கிய நிகழ்வில் மூன்று முன்முயற்சிகளை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா நாளை தொடங்கி வைப்பார்
Posted On:
27 JUN 2024 5:56PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் தர ஆரோக்கிய நிகழ்வில் மூன்று முன்முயற்சிகளை புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா நாளை (28.06.2024) தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வுக்கு இந்தத் துறையின் இணையமைச்சர்களான திரு ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத் ராவ், திருமதி அனுப்ரியா சிங் படேல் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.
ஆயுஷ் ஆரோக்கிய மந்திர்களின் துணை மையங்களுக்கான தேசிய தர உத்தரவாத நிலைகள் மதிப்பீட்டைக் காணொலிக் காட்சி மூலம் அமைச்சர் தொடங்கிவைப்பார். நேரம் மற்றும் செலவைக் குறைக்கும் நடவடிக்கை என்ற நிலையில், பொது சுகாதார மையங்களுக்கான கட்டமைப்பின் தரத்தை உறுதி செய்வதில் இது முக்கியமான அம்சமாக இருக்கும். இந்த நடைமுறை மூலம் காணொலிக் காட்சியில் மதிப்பீடு செய்யப்பட்ட துணை மையங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்தத் தர நிலைகள் தொடர்ச்சியான, அணுகக்கூடிய, பொறுப்புள்ள சுகாதாரக் கவனிப்பு சேவைகள் நாடு முழுவதும் கிடைப்பதை உறுதி செய்யும். இத்தகைய மதிப்பீடுகள் செய்யப்படுவதற்கு அனைத்து பொது சுகாதார நிறுவனங்களும் ஊக்கப்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையைத் துரிதப்படுத்தவும், சுகாதார நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் சுகாதார அமைச்சகம் தகவல் பலகையை உருவாக்கியுள்ளது. இது தேசிய, மாநில, மாவட்ட அளவிலான சுகாதார நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். நாளைய நிகழ்வின் போது ஒருங்கிணைந்த பொது சுகாதார சேவைகளுக்கான தகவல் பலகையையும் மத்திய அமைச்சர் திரு ஜெ. பி நட்டா தொடங்கிவைப்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029139
----
SMB/KPG/DL
(Release ID: 2029185)
Visitor Counter : 73