குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய சக்தியாக திகழும் என திரு ஜித்தன் ராம் மஞ்ஜி தகவல்

Posted On: 27 JUN 2024 5:38PM by PIB Chennai

தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய சக்தியாக திகழும் என இத்துறைக்கான (MSME) மத்திய அமைச்சர் திரு ஜித்தன் ராம் மஞ்ஜி தெரிவித்துள்ளார். சர்வதேச எம்எஸ்எம்இ தினத்தையொட்டி நடைபெற்ற  ‘உத்யாமி பாரத்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உள்ளடக்கிய மற்றும் திட்டமிட்ட அணுகுமுறை மூலம், முயற்சிகளை விரிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக, கிராமப்புறங்களில் வேகமாக மாறி வரும் தொழில் சூழலுக்கேற்ப, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்துறையில் மேற்கொள்ளப்படும் சட்ட சீர்திருத்தங்கள், தொழிலாளர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தொழில் துறையினருக்கு கடனுதவி கிடைக்கச்செய்தல், மேம்பட்ட சந்தை அணுகுமுறை மற்றும் மின்னணு வர்த்தகத்தை பின்பற்றுதல், நவீன தொழில்நுட்பங்கள் வாயிலாக உற்பத்தியை அதிகரித்தல், கதர் மற்றும் கயிறு தயாரிப்பு தொழில்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, பெண்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு அதிகாரமளிப்பதும் அரசின் முக்கிய முன்முயற்சியாக இருக்கும் என்றும் திரு ஜித்தன் ராம் மஞ்ஜி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029130

***

MM/RS/DL


(Release ID: 2029174) Visitor Counter : 75