வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

எட்டு முக்கிய கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட கட்டமைப்பு திட்டமிடல் குழுவின் 73-வது கூட்டத்தில் ஆய்வு

Posted On: 27 JUN 2024 4:20PM by PIB Chennai

கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 73-வது கூட்டம், மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.

ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்கள், தேசிய தொழில் பெருவழித்தட வளர்ச்சிக் கழகத்தின் 6 திட்டங்கள் என மொத்தம் 8 முக்கிய கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களின் மூலம் சமூக-பொருளாதார பலன்களுடன், மேம்பட்ட போக்குவரத்து இணைப்பு வசதி, குறைவான கட்டணத்தில் சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ள ஏதுவாக, பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2029064

***

MM/RS/DL



(Release ID: 2029161) Visitor Counter : 24