குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மாநிலங்களவை உறுப்பினர் திரு. சஞ்சய் சிங் பதவி நீக்கத்தை திரும்பப் பெறுவது தொடர்பான அறிவிப்பு
Posted On:
27 JUN 2024 1:48PM by PIB Chennai
தலைவர்: மாண்புமிகு உறுப்பினர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு சஞ்சய் சிங், உரிமைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை 2023 ஜூலை 24 அன்று அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் சிங்கிற்கு எதிராக நிலுவையில் உள்ள விவகாரங்கள் குறித்து மாநிலங்களவையின் உரிமைக் குழு தனது 77 மற்றும் 78-வது அறிக்கைகளை 2024 ஜூன் 26 அன்று சமர்ப்பித்துள்ளது.
திரு.சஞ்சய் சிங்கின் மீதான உரிமை மீறல் புகாரில், அவர் குற்றவாளி என்று உரிமைக்குழு தீர்ப்பளித்துள்ள அதே வேளையில், உறுப்பினர் ஏற்கெனவே இதற்குப் போதுமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்திருக்கிறார் என்றும் பரிந்துரைத்துள்ளது.
மாநிலங்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிமுறைகளின், 202 மற்றும் 266 பிரிவுகளின் கீழ் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உறுப்பினர் திரு சஞ்சய் சிங் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கும் வகையில் ஜூன் 26 முதல் இடைநீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு இந்த அவை ஒப்புதல் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்
*****
SMB/PKV/RR/KV
(Release ID: 2029080)
Visitor Counter : 66