தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

2023-24 அலைக்கற்றை ஏலம் வெற்றிகரமாக முடிந்தது

Posted On: 26 JUN 2024 7:42PM by PIB Chennai

2024-ஆம் ஆண்டில் காலாவதியாகும் அலைக்கற்றை மற்றும் 2022 இல் நடைபெற்ற முந்தைய ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் விற்கப்படாத அலைக்கற்றை ஆகியவை தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் அலைக்கற்றை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்டன.

800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் கிடைக்கக்கூடிய அனைத்து அலைக்கற்றைகளும் ஏலத்திற்கு விடப்பட்டன. இந்த ஆண்டு ஏலம் 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் செயல்பாட்டைக் கண்டது.

ஜூன் 25, 2024 அன்று காலை 10:00 மணிக்கு தொடங்கி ஜூன் 26,2024 அன்று காலை 11:45 மணிக்கு 7 சுற்றுகளுக்குப் பிறகு ஏலம் முடிவடைந்தது. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது  5 ஜி பணமாக்குதல் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 800 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் ஏலம் நடைபெறவில்லை. மீதமுள்ள 533.6 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் மொத்தம் 141.4 மெகா ஹெர்ட்ஸ் (26.5%) விற்பனை செய்யப்பட்டது.

பார்தி ஏர்டெல் லிமிடெட், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் மற்றும் வோடபோன் ஐடியா லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களும் இதில் பங்கேற்று வளர்ச்சி மற்றும் சேவைகளின் தொடர்ச்சிக்காக அலைக்கற்றையை வெற்றிகரமாக ஏலம் எடுத்துள்ளனர். ரூ.11,340 கோடி மதிப்பிலான 141.4 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் வோடபோன் ஐடியா லிமிடெட் ஆகியவை 900 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் காலாவதியான ஸ்பெக்ட்ரத்தை வெற்றிகரமாகப் புதுப்பித்துள்ளன. மேலும் ரூ .6164.88 கோடி மதிப்புள்ள 87.2 மெகா ஹெர்ட்ஸ் கூடுதல் அளவு இந்த நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளது.

விற்கப்படாத அலைக்கற்றை அடுத்த முறை மீண்டும் ஏலத்திற்கு விடப்படும்.

*** 

ANU/PKV/BR/KV
 



(Release ID: 2028950) Visitor Counter : 15