பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பைஜூஸ் நிறுவனம் மீதான விசாரணை குறித்து வெளியான தகவல்களுக்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் மறுப்புத் தெரிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 26 JUN 2024 7:26PM by PIB Chennai

கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் (எம்.சி.ஏ) நடத்தி வரும் விசாரணையிலிருந்து பைஜூஸ் நிறுவனம் விடுவிக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின.

நிதி மோசடி தொடர்பாக பைஜூஸ் நிறுவனத்தின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த நிறுவனம் விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள்  உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறானவை என திட்டவட்டமாக தெளிவுபடுத்தப்படுகிறது.

நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் கார்ப்பரேட் விவகாரங்கள்  துறை அமைச்சகம் தொடங்கிய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

****

PLM/KPG/DL


(रिलीज़ आईडी: 2028900) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Gujarati , Telugu