இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஜூடோ வீராங்கனை துலிகா மான் பெற்றுள்ளார்
प्रविष्टि तिथि:
26 JUN 2024 5:45PM by PIB Chennai
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடைப்பிரிவில் இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா மான் பங்கேற்க உள்ளார். இந்தியாவிலிருந்து இப்பிரிவில் பங்கேற்கும் 9-வது வீராங்கனை துலிகா ஆவார்.
மத்திய அரசின் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் (டாப்ஸ்) மூலம் தமக்கு கணிசமான உதவி கிடைத்துள்ளதாக துலிகா தெரிவித்துள்ளார். டாப்ஸ் திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விளையாட்டுகளில் பல வீரர்கள் பயனடைந்து வருகின்றனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த துலிகா மான், இத்திட்டத்தின் மூலம் செலவுகளை சமாளிக்க முடிவதாகவும், பதற்றம் இல்லாமல் சிறந்த பயிற்சியைப் பெறமுடிவதாகவும் இதனால் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கிறது எனவும் தெரிவித்தார்.
பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் துலிகா வெள்ளிப்பதக்கம் வென்றார். அதன் பிறகு கடந்த மாதம் அபுதாபியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல் திறனை வெளிப்படுத்திய அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.
டாப்ஸ் என்பது தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள வீரர்களுக்கு சிறந்த பயிற்சி, உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை போன்றவை இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.
****
SMB/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2028894)
आगंतुक पटल : 107