உள்துறை அமைச்சகம்

10-வது சர்வதேச யோகா தினம்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, அகமதாபாதில் யோகா பயிற்சி மேற்கொண்டார்

Posted On: 21 JUN 2024 2:29PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தையொட்டி அகமதாபாதில் யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள யோகா ஆர்வலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா,  2014 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்ற திரு நரேந்திர மோடி முதன் முறையாக ஐநா சபையில் உரையாற்றியபோது, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடுமாறு முன்மொழிந்ததாக கூறினார். இதன் மூலம் நமது பண்டைக்கால அறிவியல் மற்றும் நமது முனிவர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ள தனித்துவமான கொடையாக கருதப்படும் யோகாவை பிரதமர் உலகத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை 170-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டு, தற்போது ஒட்டுமொத்த உலகமும் யோகாவை பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

யோகா பயிற்சி ‘வசுதைவ குடும்பகம்’ என்ற தாரக மந்திரத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார்.  உலகிற்கும், மனிதகுலத்திற்கும் இந்தியா  ஏராளமானவற்றை வழங்கியிருப்பதாக தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர், யோகா பயிற்சி மிகப்பெரிய கொடையாகவும், அனைவரும் விரும்பக்கூடியதாகவும் உள்ளது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027395 

***

SMB/MM/RS/RR



(Release ID: 2027508) Visitor Counter : 22