கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரின் முயற்சிகளால் வழிநடத்தப்பட்டு உலகளாவிய மக்கள் இயக்கமாக யோகா மாறியுள்ளது: சர்பானந்த சோனோவால்
प्रविष्टि तिथि:
21 JUN 2024 1:16PM by PIB Chennai
அசாம் மாநிலம் தின்சுகியாவில் நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில், நூற்றுக்கணக்கான சுகாதார ஆர்வலர்களுடன், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பங்கேற்றார். மனம், உடல் மற்றும் ஆன்மாவை யோகா வளப்படுத்துகிறது என்று திரு சோனோவால் கூறினார். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்திற்கு ஆரோக்கியம் என்ற பரிசை வழங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சிகளால் வழிநடத்தப்பட்டு உலகளாவிய வெகுஜன இயக்கமாக மாறியுள்ளது. நமது வாழ்க்கையை மேம்படுத்த யோகாவை தினசரி பழக்கமாக பின்பற்றுவோம் என்று அவர் கூறினார்.
யோகா எல்லைகளைக் கடந்தது. மனிதகுலத்திற்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான கலங்கரை விளக்கமாக உள்ளது என்று திரு சோனோவால் கூறினார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக யோகாவை நமது வாழ்வில் ஒன்றிணைந்து கொண்டு வருவோம் என்று அவர் கூறினார்.
புதுதில்லி போக்குவரத்து பவனில் நடைபெற்ற யோகா அமர்வில் கப்பல் துறை செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.
***
(Release ID: 2027353)
PKV/AG/RR
(रिलीज़ आईडी: 2027492)
आगंतुक पटल : 73