நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சந்தை தலையீடுகளை சமாளிக்க போதுமான கோதுமை இருப்பு உள்ளது: மத்திய அரசு

प्रविष्टि तिथि: 20 JUN 2024 3:50PM by PIB Chennai

அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஏதுவாக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

கோதுமை கையிருப்பு நிலை மற்றும் விலைகள் குறித்த விரிவான விவாதம் நடைபெற்றது. ரஃபி சந்தை பருவம் 2023-ல் 262 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதலுக்கு எதிராக 18.06.2024 வரை தோராயமாக 266 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கோதுமை விலையை உன்னிப்பாகக் கண்காணித்து, நாட்டின் நுகர்வோருக்கு விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், தகுந்த கொள்கைத் தலையீடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

***

(Release ID: 2027013)

AD/PKV/AG/RR


(रिलीज़ आईडी: 2027094) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Odia , Kannada