தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மும்பை சர்வதேசத் திரைப்படவிழாவில் அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் தொடர்பான பயிலரங்கு

Posted On: 17 JUN 2024 7:08PM by PIB Chennai

அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் தொடர்பான  பயிலரங்கு மும்பை சர்வதேசத் திரைப்படவிழாவில் 2024, ஜூன் 16 அன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.   மூத்த அனிமேஷன் கலைஞரான ராகுல் பாபு கன்னிகரா இதற்குத் தலைமை தாங்குகிறார்.

தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் பயிலரங்கில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனிமேஷன் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். அனிமேஷன்    தொழில்நுட்பத்தின் புதிய  வாய்ப்புகள் குறித்து இந்தப் பயிலரங்கு விரிவாக ஆராய்கிறது. இந்தப் பயிலரங்கின் முடிவில் இதில் பங்கேற்றவர்கள் 10 முதல் 15 விநாடிகள் கொண்ட சுருக்கமான அனிமேஷன் வீடியோக்களை உருவாக்க உள்ளனர்.

2024  ஜூன் 20-ம் தேதி நிறைவடையும் இந்தப் பயிலரங்கின் பல்வேறு அமர்வுகளில் அனிமேஷன் வல்லுநர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தப் பயிலரங்கில் பங்கேற்றுள்ளவர்கள் அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் தொடர்பான கூடுதல் அனுபவங்களைப் பெற முடியும் என்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தத் துறைகளில் புதிய வாய்ப்புகளைப் பெறமுடியும் என்றும் இப்பயிலரங்கை நடத்தும் ராகுல் பாபு கன்னிகரா தெரிவித்தார்.

**

SRI/PLM/KPG/KV



(Release ID: 2026178) Visitor Counter : 18