தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்படத் துறையில் தொழில்நுட்பத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை எடுத்துக்காட்டும் 'செயற்கை நுண்ணறிவின் அற்புதம்' குறித்து மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் விவாதம்

Posted On: 17 JUN 2024 6:30PM by PIB Chennai

திரைப்படத் துறையில் செயற்கை நுண்ணறிவின் உருமாறும் தாக்கம் குறித்த ஒரு அறிவூட்டும் குழு விவாதம் மும்பை சர்வதேச திரைப்பட விழா 2024 –ல் நடைபெற்றது. 'செயற்கை நுண்ணறிவின் அற்புதம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமர்வு, திரைப்படத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நோக்கம், பயன்பாடுகள் மற்றும் நெறிமுறை பரிசீலனைகள் குறித்து கவனம் செலுத்தியது. குழு உறுப்பினர்கள் செயற்கை நுண்ணறிவின் நன்மைகள், சாத்தியமான குறைபாடுகள் ஆகிய இரண்டையும் விவாதித்தனர். தொழில்துறையில் அதன் செல்வாக்கு பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கினர்.

இந்தக் குழுவில் திரைப்படத் துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த திரைப்பட இயக்குநரும், செயற்கை நுண்ணறிவு நிபுணருமான சங்கர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்; இந்த அமர்வை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விஞ்ஞான் பிரசாரின் அறிவியல் தொடர்பாளர் மற்றும் அறிவியல் திரைப்படக் காப்பாளர் டாக்டர் நிமிஷ் கபூர் நெறிப்படுத்தினார்.

திரைப்படத் தயாரிப்புக்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும் திறனை எடுத்துரைத்த சங்கர் ராமகிருஷ்ணன், செயற்கை நுண்ணறிவு திரைப்படத் தொகுப்புகளில் பல பணிகளை துல்லியமாக நிர்வகிப்பதுடன், ஒவ்வொரு வேலைக்கும் தேவையான நேரத்தைக் குறைக்கிறது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு மனித உழைப்பின் தேவையைக் குறைக்கும் அதே வேளையில், தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருக்க வைக்கும் அபாயமும் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவாதம் திரைப்படத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டியது. அதே நேரத்தில் நெறிமுறை பரிசீலனைகள் மற்றும் பொறுப்பான பயன்பாட்டின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. குழு உறுப்பினர்களின் நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு யுகத்தில் திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலம் குறித்த மதிப்புமிக்க முன்னோக்குகளை வழங்கியது.

***

SRI/PKV/RR/KV



(Release ID: 2026084) Visitor Counter : 21