குடியரசுத் தலைவர் செயலகம்

ஈத்-உஸ்-ஜுஹாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து

Posted On: 16 JUN 2024 6:06PM by PIB Chennai

பக்ரீத் எனப்படும் ஈத்-உஸ் ஜுஹாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஈத்-உஸ் ஜுஹாவை முன்னிட்டு, வெளிநாடுகளில் உள்ள அனைத்து சக குடிமக்களுக்கும், இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புனித பண்டிகையான ஈத்-உஸ்-ஜுஹா துறவு மற்றும் தியாகத்தின் அடையாளமாகும். இது அன்பு, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியை அளிக்கிறது. இந்தப் பண்டிகை மனிதகுலத்திற்கு தன்னலமற்ற சேவை செய்ய நமக்கு உத்வேகம் அளிக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்போம்" என்று கூறியுள்ளார்.

***


AD/PKV/DL



(Release ID: 2025749) Visitor Counter : 31