தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 14 JUN 2024 11:14AM by PIB Chennai

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா நேற்று (13 ஜூன் 2024) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இபிஎப்ஓ அமைப்பின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உரிமைகோரல் தீர்வை தானியக்கமாக்குவதற்கும் உரிமைகோரல்கள் நிராகரிக்கப்படுவதைக் குறைப்பதற்கும் இபிஎப்ஓ சமீபத்தில் மேற்கொண்ட புதிய நடவடிக்கைகளை திருமதி தவ்ரா பாராட்டினார்.

சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதன் அவசியம், வழக்குகள் மேலாண்மை மற்றும் தணிக்கையில் செயல்பாட்டு சீர்திருத்தங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பயனுள்ள சமூகப் பாதுகாப்பு நடைமுறைக்கு சிறந்த ஒருங்கிணைப்புடன் பணியாற்றுமாறு திருமதி தவ்ரா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

***

SMB/PLM/AG/KV



(Release ID: 2025246) Visitor Counter : 68