உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
விமானப் போக்குவரத்து அமைச்சராக திரு கிஞ்சரப் ராம்மோகன் நாயுடு பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
13 JUN 2024 5:38PM by PIB Chennai
விமானப் போக்குவரத்து அமைச்சராக திரு கிஞ்சரப் ராம்மோகன் நாயுடு இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வின் போது விமானப் போக்குவரத்து மற்றும் கூட்டுறவு அமைச்சகங்களின் இணையமைச்சர் திரு முரளீதர் மொஹோல், விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு உம்லுன்மாங் உல்னம் மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு நாயுடு, அனைத்து குடிமக்களுக்கும் விமானப் பயணம் எளிதாகவும், வசதியாகவும் கிடைப்பதை உறுதி செய்வது தமது அமைச்சகத்தின் முன்னுரிமையாக இருக்கும் என்றார்.
பயணிகள் அனுபவத்தை விரிவாக்குவதில் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காண செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகத்தை பயன்படுத்தும் திட்டம் உள்ளதாக கூறினார்.
விஜயநகர மாவட்டம் போகபுரத்தில் பசுமை விமான நிலைய பணிகளை நிறைவு செய்வது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், இந்தத் திட்டத்தை விரைவுப்படுத்துவது தமது தனிப்பட்ட உறுதிப்பாடு என்றார். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை மாற்றும் அரசின் அர்ப்பணிப்பையும் அமைச்சர் உறுதி செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2025081
***
AD/SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2025176)
आगंतुक पटल : 163