தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் அணுகலுக்கு கூடுதல் முக்கியத்துவம்
Posted On:
12 JUN 2024 3:58PM by PIB Chennai
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் (எம்.ஐ.எஃப்.எஃப்) சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு திரைப்படங்களின் மகிழ்ச்சியை எடுத்துச் செல்லும் ஒரு சிறப்பு முயற்சியில், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம், அணுகல் மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பான ஸ்வயம் என்பதுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது தவிர, விழாவில் மாற்றுத்திறனாளிகள் திரைப்படங்களை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் திரைப்படங்கள் என்ற சிறப்புத் தொகுப்பும் காட்சிப்படுத்தப்படும்.
திரைப்பட விழாக்களின் சாம்ராஜ்யத்தில் ஒரு புதிய தரத்தை அமைத்து, அரங்க அணுகலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவது எம்.ஐ.எஃப்.எஃப் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். "இந்த முறை மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகலை உறுதி செய்வது மட்டுமல்லாமல், திருவிழாவில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மாற்றுத்திறனாளிகளைக் கையாள சரியான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்படுவதையும் உறுதி செய்வோம்" என்று விழா இயக்குநர் திரு பிரிதுல் குமார் கூறினார்.
2024, ஜூன் 13 அன்று எம்.ஐ.எஃப்.எஃப் வளாகத்தில் பிரத்யேக உணர்திறன் பயிற்சி அமர்வை ஸ்வயம் நடத்தும். இந்தப் பயிற்சி அமர்வில் மூத்த அதிகாரிகள், பங்குதாரர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 120-க்கும் மேற்பட்ட அமைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் செவித்திறன் குறைபாடு உள்ள பார்வையாளர்களுக்காக இந்திய சைகை மொழி மற்றும் எழுத்துகளுடன் கூடிய படங்களும், பார்வையற்றவர்களுக்கான ஒலி விளக்கத்துடன் கூடிய படங்களும் திரையிடப்படும். மாற்றுத்திறனாளிகள் திரைப்படங்கள் என்ற சிறப்புத் தொகுப்பில் நான்கு படங்கள் ஜூன் 19 அன்று திரையிடப்படும்.
***
(Release ID: 2024702)
SMB/BR/RR
(Release ID: 2024946)
Visitor Counter : 54