பிரதமர் அலுவலகம்
குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JUN 2024 7:17PM by PIB Chennai
குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். .
குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் செய்துள்ள பதிவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அன்பானவர்களை இழந்துள்ள அனைவருக்கும் எனது அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.”
***
SRI/SMB/RS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2024834)
வருகையாளர் எண்ணிக்கை : 105
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam