வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஃபிலிப்கார்ட் மற்றும் இந்திய பொம்மைகள் உற்பத்தி தொழில் துறையுடன் இணைந்து பயிலரங்கு நடத்தப்பட்டது
प्रविष्टि तिथि:
12 JUN 2024 4:10PM by PIB Chennai
இந்தியாவில் வளர்ந்து வரும் பொம்மைகள் உற்பத்தி தொழில் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், புதுதில்லியில் இன்று, தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, ஃபிலிப்கார்ட் மற்றும் இந்திய பொம்மைகள் உற்பத்தித் துறையுடன் இணைந்து பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பொம்மைகள் தொழில்துறையை மேலும் வளர்ப்பது, உள்நாட்டு பயன்பாட்டை அதிகரிப்பது, பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு/ மறுதிறன் அளிப்பது ஆகியவற்றுக்காக இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
இந்தப் பயிலரங்கில் உரையாற்றிய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு உலகளாவிய சந்தையை உருவாக்கும் தொலைதூர நோக்கத்துடன் பொம்மைகள் உற்பத்தி தொழில் துறைக்கான சிறந்த சூழலை உருவாக்கும் வலுவான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்தப் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
இந்திய பொம்மைகள் உற்பத்தித் தொழில்துறை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், சீனா உட்பட 100-க்கும் அதிகமான நாடுகளில் சந்தையை விரிவுபடுத்தியிருப்பதாக தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை இணைச்செயலாளர் திரு சஞ்சீவ் தெரிவித்தார். இணையதள வசதிகளை பயன்படுத்தி சர்வதேச பயன்பாட்டாளர்களை அடைவது பொம்மைகள் உற்பத்தி தொழில்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
***
(Release ID: 2024706)
SRI/SMB/RS/RR
(रिलीज़ आईडी: 2024781)
आगंतुक पटल : 121