ஜல்சக்தி அமைச்சகம்
மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சராக திரு வி.சோமண்ணா பொறுப்பேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 JUN 2024 1:08PM by PIB Chennai
மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சராக திரு வி சோமண்ணா புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சகத்தின் பொறுப்பை தம்மை நம்பி அளித்த பிரதமருக்கு அவர் நன்றி கூறினார். "கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறன்மிக்க தலைமையின் கீழ் சிறந்த வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசின் மூன்றாவது ஆட்சிக்காலத்திலும் துறையின் வளர்ச்சி வேகம் தொடரும் என்று உறுதியுடன் கூறினார்.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 76% க்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளில் ஒரு நபருக்கு நாள்தோறும் 55 லிட்டர் தரமான தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்) கீழ், இந்தியாவில் 93% க்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன என்றும், சுமார் 33% கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் கூறினார். இந்த சாதனையின் அடிப்படையில், 2025 மார்ச் மாதத்திற்குள் அனைத்து கிராமங்களையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளின் கீழ் கொண்டு வர நாங்கள் முயற்சி செய்வோம் என்று அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் தொகுதியில் இருந்து முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோமண்ணா, மாநில அரசில் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். முன்னதாக, அலுவலகத்திற்கு வந்த ஜல் சக்தி அமைச்சகத்தின் செயலாளர் (குடிநீர் மற்றும் சுகாதாரம்) திருமதி வினி மகாஜன், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
***
(Release ID: 2024608)
SG/IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2024756)
வருகையாளர் எண்ணிக்கை : 150