சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக திரு நிதின் கட்கரி பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 12 JUN 2024 12:50PM by PIB Chennai

புதுதில்லியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக திரு நிதின் கட்கரி இன்று பொறுப்பேற்றார். திரு அஜய் தம்தா, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரும் இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

மோடி 3.0 ஆட்சியில் தக்கு இந்த பொறுப்பை மீண்டும் வழங்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துகொள்வதாக திரு கட்கரி கூறினார். மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்தியா உலகத் தரம் வாய்ந்த, நவீன உள்கட்டமைப்புடன் விரைவான வேகத்தில் தயாராக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு அனுராக் ஜெயின், பிற உயர் அதிகாரிகள் மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, இணையமைச்சர்கள் திரு அஜய் தம்தா, திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை வரவேற்றனர்.

***

(Release ID: 2024596)

SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2024694) आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Malayalam