ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறைகளின் இணையமைச்சராக திரு வி சோமண்ணா பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
11 JUN 2024 4:28PM by PIB Chennai
ரயில்வே மற்றும் ஜல்சக்தி துறைகளின் இணையமைச்சராக திரு வி சோமண்ணா இன்று புதுதில்லியில் உள்ள ரயில் பவனில் பொறுப்பேற்றார். இவர் ரயில்பவனுக்கு வருகை தந்த போது, ரயில்வே வாரியத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திருமதி ஜெயா வர்மா சின்ஹா மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகள் வரவேற்றனர்.
மோடி 3.0-ன் போது ரயில்வேத் துறை வளர்ச்சியை பராமரிக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்று அமைச்சர் திரு சோமண்ணா கூறினார். ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் திறமை மிகு வழிகாட்டுதல்படி, பணியாற்றி ரயில்வே வளர்ச்சிக்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கும் பங்களிப்பு செய்வோம் என்றும் அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு சோமண்ணா, ஏற்கனவே அம்மாநில அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
***
SMB/RS/DL
(रिलीज़ आईडी: 2024372)
आगंतुक पटल : 121