பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு துறை இணையமைச்சராக திரு சஞ்சய் சேத் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
11 JUN 2024 3:36PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக 2024 ஜூன் 11 அன்று திரு சஞ்சய் சேத் பொறுப்பேற்றார். சஞ்சய் சேத்தை பாதுகாப்புச் செயலர் திரு கிரிதர் அரமனே, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சஞ்சய் சேத், இந்த பொறுப்பை தனக்கு வழங்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்ற ஆவலாக இருப்பதாக திரு சஞ்சய் சேத் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு முன்முயற்சிகளை நிறைவேற்ற பாடுபடப் போவதாக திரு சஞ்சய் சேத் தெரிவித்தார். சஞ்சய் சேத் பொறுப்பேற்பதற்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை புதுதில்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
திரு சஞ்சய் சேத் ராஞ்சி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டில் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக் குழுவின் உறுப்பினராகவும் திரு. சஞ்சய் சேத் இருந்தார். திரு சஞ்சய் சேத் 2016-2019-ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநில காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தின் தலைவராக இருந்தார்.
***
SRI/IR/AG/DL
(रिलीज़ आईडी: 2024325)
आगंतुक पटल : 193