விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக திரு சிவ்ராஜ் சிங் சௌகான் பொறுப்பேற்றார்

Posted On: 11 JUN 2024 3:09PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சௌகான், பிரதமர் திரு நரேந்திர மோடியால் நேற்று மேற்கொள்ளப்பட்ட முதல் முடிவு விவசாயிகள் நலன் சார்ந்தது என்றார். 

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் நலனுக்கு உறுதிபூண்டிருந்தது என்றும், தமது அமைச்சகம் இலக்குகளை எட்டுவதற்குத் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்களைப் பார்வையிட்ட திரு சௌகான், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல நிலையிலான ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். விவசாயிகளின் நலனுக்கான அரசின் தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த ஓர் அணியாக செயல்படுமாறும், ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து பணியாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான அரசின் திட்ட அறிக்கையை அவர்களிடம் அளித்த அமைச்சர் இதனை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணையமைச்சர்களாக திரு ராம்நாத் தாக்கூரும், திரு பாகிரத் சௌத்ரியும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அமைச்சர்களை இத்துறையின் செயலாளர் திரு மனோஜ் அஹூஜா, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளர் திரு ஹிமான்ஷூ பதக், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

***

 

 

SMB/RS/DL



(Release ID: 2024309) Visitor Counter : 54