சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் பொறுப்பேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUN 2024 1:53PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சராக திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துடன் ஆயுஷ் அமைச்சகத்தின் தனிப்பொறுப்புடன்  இணை அமைச்சர் பொறுப்பையும் அவர் வகிக்கிறார்.

திரு பிரதாப்ராவ் ஜாதவ் பொறுப்பேற்பதற்கு முன், தனது இல்லத்தில் ஒரு மரக்கன்றை நட்டார். பொறுப்பேற்ற பிறகு, தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துகொண்டார்.

2009, 2014, 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் புல்தானா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997- ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா அரசில் விளையாட்டு, இளைஞர் நலன், நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜே. பி. நட்டா பங்கேற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் திருமதி ரோலி சிங் உள்ளிட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.

***

(Release ID: 2023988)

SMB/IR/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2024100) வருகையாளர் எண்ணிக்கை : 187
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Gujarati , Telugu , Kannada