ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஜவுளித் துறை அமைச்சராக திரு கிரிராஜ் சிங் பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 11 JUN 2024 2:03PM by PIB Chennai

மத்திய ஜவுளித் துறை அமைச்சராக திரு கிரிராஜ் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இணையமைச்சர் திரு பபித்ர மார்ரிட்டா முன்னிலையில் அவரிடம் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பொறுப்பை ஒப்படைத்தார்.

ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்னா ஷா, உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு சிங், ஜவுளித் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்றும், உலகளாவிய ஏற்றுமதியிலும் இந்தத் தொழில் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.  ஜவுளித் தொழிலும் விவசாயிகளுடன் தொடர்புடையது என்றும் இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் திரு நரேந்திர மோடி வழிகாட்டுதலின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் திரு சிங் மேலும் கூறினார்.

***

(Release ID: 2023990)

SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2024033) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam