பிரதமர் அலுவலகம்

பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்

Posted On: 09 JUN 2024 11:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கும் விழா 2024  ஜூன் 09 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இலங்கை அதிபர் திரு னில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு, செஷல்ஸ் துணை அதிபர் திரு அகமது அஃபிப், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, தமது மனைவியுடன் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜுக்நாத், நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே, மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தலைவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்றுள்ள அவருக்குத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பித்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், "அண்டை நாடுகளுக்கு முதலிடம்" என்ற கொள்கை மற்றும் "சாகர் தொலைநோக்கு" ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தனது இலக்கை இந்தியா நிறைவேற்றும் அதே வேளையில், தமது மூன்றாவது பதவிக்காலத்தில், அண்டை நாடுகளுடன் நெருங்கிய கூட்டாண்மையுடன் இந்தப் பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி, செழுமைக்காக இந்தியா தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர்  உறுதியளித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அளித்த விருந்திலும் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களை வரவேற்று, நாட்டின் சேவைக்காக பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்தியாவின் ஜனநாயக செயல்பாடு அதன் மக்களுக்கு பெருமை சேர்க்கும் தருணம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்றும் கூறினார்.

***

(Release ID: 2023782)

SMB/IR/AG/RR



(Release ID: 2023973) Visitor Counter : 30