தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 சர்வதேச யோகா தினத்திற்கான தயாரிப்புகள் குறித்து தில்லியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Posted On: 07 JUN 2024 5:10PM by PIB Chennai

2024 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள வருடாந்தர சர்வதேச யோகா தினத்திற்கான தயாரிப்புகள் குறித்து தில்லியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, ஆயுஷ் அமைச்சக செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டேச்சா  ஆகியோர் ஆய்வு செய்தனர்.

யோகா பயிற்சியின் பயன்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன. பத்திரிகை தகவல் அலுவலகம், பிரசார் பாரதி, நியூ மீடியா விங் உள்ளிட்ட பிரிவுகள் முக்கிய நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு வருகின்றன. யோகா தினத்தன்று காலை நேர செயல்பாடுகளை நேரலையில் ஒலிபரப்பவிருக்கும் தூர்தர்ஷன் யோகா நிபுணர்களின் நேர்காணல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். 

ஆயுஷ் அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்துடன் இணைந்து வாழ்க்கை முறையாகவும் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காகவும் யோகாவை மேம்படுத்துதல் குறித்த நிகழ்வுகளை அகில இந்திய வானொலி ஒலிபரப்பும். அனைத்து ஊடகத் தளங்களிலும் பகிர்வதற்காக யோகா கீதத்தை ஆயுஷ் அமைச்சகம் தயார் செய்கிறது.

யோகா குறித்த செய்தியை பரவலாக்குவதில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சர்வதேச யோகா தின ஊடக விருதினை சென்ற ஆண்டு நிறுவியது.  சென்ற ஆண்டுக்கான விருதுகளும், இந்த ஆண்டுக்கான விருதுகளும், ஓராண்டு நிகழ்வுகளுக்குப் பின் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023451

*** 

AD/SMB/KPG/DL

 


(Release ID: 2023514) Visitor Counter : 56