பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் தொலைபேசி மூலம் வாழ்த்து

பிரதமர் திரு அல்பானீஸ் வாழ்த்துக்கு
பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்

பகிரப்பட்ட முன்னுரிமைகள் அடிப்படையில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தங்களது அர்ப்பணிப்பை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUN 2024 2:14PM by PIB Chennai

ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலிய பிரதமரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்.

2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தையும், கடந்த செப்டம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது பிரதமர் அல்பானீஸை சந்தித்ததையும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட முன்னுரிமைகளில் ஆஸ்திரேலிய பிரதமருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றவும், து உறுதியான அர்ப்பணிப்பை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

***

(Release ID: 2023076)

PKV/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2023102) வருகையாளர் எண்ணிக்கை : 109