தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொழில்துறை 4.0 மாற்றத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்கான முன்னெடுப்பை தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது
Posted On:
05 JUN 2024 3:06PM by PIB Chennai
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை தொழில்துறை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் புதிய முன்னெடுப்பை தொடங்க தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.
தொழில்துறை 4.0 க்கு ஏற்ப சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதையும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனங்களுக்கிடையே அடிப்படை ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. குறைந்தபட்சம் 10 துறைகளில் துறை சார்ந்த தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காண்பது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மாறுபட்ட நிலப்பரப்பை அங்கீகரிப்பது, புதிய கண்டுபிடிப்புகள், போட்டித்தன்மையை வளர்ப்பதற்கான இலக்கிற்கு ஆதரவை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கணக்கெடுப்பு, 60 நாள் காலப்பகுதியில், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தலா ஐந்து துறைகளில் நடைபெறும்.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் 2024 ஜூன் 11-க்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கூடுதல் விவரங்களை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
https://tcoe.in/include/Call_of_Proposal_Baseline_Survey_of_MSMEs.pdf
***
AD/IR/AG/RR
(Release ID: 2022855)
Visitor Counter : 88