பாதுகாப்பு அமைச்சகம்

ருத்ராஎம்-II ஏவுகணை, சுகோய்-30 எம்கே-I இலிருந்து டிஆர்டிஓவால் வெற்றிகரமாக ஏவி சோதனை செய்யப்பட்டது

Posted On: 29 MAY 2024 4:56PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ, மே 29 அன்று ஒடிசா கடற்கரையில் சுமார் 11.30 மணி அளவில் இந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கே-I விமானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ஏவப்படும் ருத்ராஎம்-II - ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்தச் சோதனை, அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்தது.

ருத்ராஎம்-II - என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட-உந்துதல் ஏவுகணை அமைப்பாகும். இது பல வகையான எதிரிகளின்  இலக்குகளை  தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. டிஆர்டிஓ ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட பல அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் ஏவுகணை அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ருத்ராஎம்-II-ன் வெற்றிகரமான சோதனைக்காக டிஆர்டிஓ, இந்திய விமானப்படை  ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெற்றிகரமான சோதனையானது, ஆயுதப் படைகளுக்கு  வலுசேர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.

***

AD/PKV/AG/DL



(Release ID: 2022116) Visitor Counter : 67