சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜெனீவாவில் நடைபெற்ற 77 வது உலக சுகாதார மாநாட்டின் ஒரு பகுதியாக பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
29 MAY 2024 3:41PM by PIB Chennai
ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் 77-வது உலக சுகாதார மாநாட்டையொட்டி இன்று நடைபெற்ற பிரிக்ஸ் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திரு அபூர்வ சந்திரா உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய அவர், பிரிக்ஸ் நாடுகளிடையே சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டு செயல் திட்டங்களை உருவாக்குவதில் இந்தியா தீவிர ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப தொற்று அபாயங்களைத் தடுப்பதற்கும், நோய் கண்காணிப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையில் கவனம் செலுத்துவதற்கும் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரிக்ஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் போது தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்
மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், கதிரியக்க-மருந்து விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். அணு மருத்துவம் மற்றும் கதிரியக்க மருந்துவ அறிவியலில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு அபூர்வ சந்திரா வலியுறுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ஹெகாலி ஜிமோமி மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
****
(Release ID: 2022058)
AD/PLM/KPG/RR
(रिलीज़ आईडी: 2022066)
आगंतुक पटल : 116