குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நாட்டில் உடல்தகுதி கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 27 MAY 2024 3:10PM by PIB Chennai

ஒவ்வொரு இந்தியரும் உடல்தகுதியோடும், ஆரோக்கியமாகவும் இருக்கும் வகையில் நாட்டில் உடல்தகுதி கலாச்சாரத்தை ஊருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள ஐசிஎம்ஆர் தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தின் 18-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், ஆரோக்கியம் என்று வரும்போது "நமது அறிவு, நமது ஞானம்" ஆகியவற்றில்  கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவத்தின் வளமான பாரம்பாரியங்கள் நமது முன்னோர்களின் ஆழ்ந்த ஞானத்திற்கு சான்றாகும் என்று அவர் கூறினார்.

டாக்டர் (திருமதி) சுதேஷ் தன்கர், கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பாஹல், சுகாதார ஆய்வுத் துறையின் இணைச் செயலாளர் திருமதி அனு நாகர், என்ஐடிஎம் இயக்குநர் டாக்டர் சுபர்ணா ராய், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

என்ஐடிஎம் நிகழ்ச்சிக்குப் பின், பெலகாவியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கேஎல்இ உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு  துணைத்தலைவர் உரையாற்றினார்.

மாணவர்களின் உயர் கல்வித் தகுதிகள் நாட்டின் சொத்து என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களை இவை ஒருங்கிணைந்த பகுதியாக மாறும் என்றும் பட்டம் பெற்ற மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கேஎல்இ உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் வேந்தர் டாக்டர் பிரபாகர் கோரே, துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) நிதின் எம் கங்கனே, ஆசிரியர்கள், ஊழியர்கள், பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021792

***

SRI/SMB/AG/KR/DL



(Release ID: 2021825) Visitor Counter : 34