தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

இந்திய செல்பேசி எண்களைக் காட்சிப்படுத்தும் சர்வதேச மோசடி அழைப்புகளைத் தடுக்க மத்திய அரசு உத்தரவு

Posted On: 26 MAY 2024 12:37PM by PIB Chennai

மோசடி செய்பவர்கள், இந்திய குடிமக்களுக்கு இந்திய செல்பேசி எண்களைக் காட்சிப்படுத்தி சர்வதேச அளவில் மோசடி அழைப்புகளை மேற்கொள்வதாகவும், சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்புகள் இந்தியாவிற்குள் தோன்றியதாகத் தெரிகிறது, ஆனால் அழைப்பு வழி அடையாளத்தை (சி.எல்.) மாற்றி, வெளிநாட்டைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் இவை செய்யப்படுகின்றன. போலி டிஜிட்டல் கைதுகள், ஃபெடெக்ஸ் மோசடிகள், கூரியரில் போதைப்பொருள், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளாக ஆள்மாறாட்டம், டி..டி / டிராய் அதிகாரிகளால் செல்பேசி எண்கள்  துண்டிக்கப்படுதல் போன்ற சமீபத்திய வழக்குகளில் இதுபோன்ற சர்வதேச ஏமாற்று அழைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, தொலைத் தொடர்புத் துறை (டி..டி) மற்றும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் (டி.எஸ்.பி) எந்தவொரு இந்திய தொலைத் தொடர்பு சந்தாதாரரும் இத்தகைய சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் கண்டு தடுக்க ஒரு முறையை வகுத்துள்ளன. தற்போது இதுபோன்ற சர்வதேச ஏமாற்று அழைப்புகளை தடுக்க டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய லேண்ட்லைன் எண்களுடன் உள்வரும் சர்வதேச மோசடி அழைப்புகள் ஏற்கனவே டி..டி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி டி.எஸ்.பி.க்களால் தடுக்கப்பட்டுள்ளன.

பயனர்களின் பாதுகாப்பு, டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், தொலைத் தொடர்பு பயனர்களைப் பாதுகாக்க குடிமக்களை மையமாகக் கொண்ட சஞ்சார் சாத்தி தளம் (https://sancharsaathi.gov.in/)  உட்பட பல முயற்சிகளை தொலைத் தொடர்புத் துறை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.

சிறந்த முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், வேறு வழிகளை மோசடிக்காரர்கள் கையாளலாம். இதுபோன்ற அழைப்புகளுக்கு, சஞ்சார் சாத்தியில் உள்ள சக்ஷு பிரிவில் சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகளைப் புகாரளிக்கலாம்.

***

ANU/AD/BR/KV

 

 

 

 



(Release ID: 2021695) Visitor Counter : 74