தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

வாழ்க்கையை எளிதாக்குவதை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு விரிவுபடுத்தியுள்ளது: உரிமை கோரிப் பெறுவதற்கான சேவைக்காலம் குறைக்கப்பட்டுள்ளது

Posted On: 13 MAY 2024 6:58PM by PIB Chennai

ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின்  பத்தி 68-ஜெ மூலம் உடல்நலம் குன்றியதற்காக முன்பணம் கேட்டு 09.05.2024 அன்று திரு அனிருத் பிரசாத் விண்ணப்பித்தார். 11.05.2024 அன்று அவர் கோரிய தொகையான ரூ.92,143 (3 நாட்களுக்குள்) வழங்கப்பட்டது.  இவரைப் போல் பலர்  உதாரணங்களாக இருக்கின்றனர்.

வாழ்க்கையை எளிதாக்குதல் என்பதை செயல்படுத்த தானியங்கி உரிமை கோரல் தீர்வு அனைத்துப் பிரிவுகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டம் பத்தி 68-கே மூலம் கல்வி மற்றும் திருமணத்திற்கும் 68-பி மூலம் வீட்டுவசதிக்கும் விண்ணப்பிக்கலாம்.  மேலும் உரிமை கோரும் தொகையின் அளவும் ரூ.50,000 என்பதிலிருந்து ரூ. ஒரு லட்சம் என இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட மே 6-ம் தேதிக்குப் பின் இந்தியா முழுவதும் 13,011 நேர்வுகளில்  ரூ.45.95 கோடி அளவுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

***

 

AD/SMB/KPG/DL



(Release ID: 2020490) Visitor Counter : 64