பாதுகாப்பு அமைச்சகம்

106 வது ஒருங்கிணைந்த பயிற்சி படையின் முதல் பயிற்சி

Posted On: 12 MAY 2024 5:31PM by PIB Chennai

கடுமையான கடல் பயிற்சியின் முடிவில், 106வது ஒருங்கிணைந்த பயிற்சி அதிகாரிகளுக்கான பயிற்சி  நிறைவு இரவு விருந்து 09 மே 24 அன்று முதல் பயிற்சி படைப்பிரிவில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வைஸ் அட்மிரல் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டார். சர்வதேச பயிற்சி அதிகாரிகள்  உட்பட 99 கடல் பயிற்சியாளர்கள்  வெற்றிகரமாக பயிற்சியை முடித்தனர்.  பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததற்காக பாராட்டிய கமாண்டிங் இன் சீப்திறமையான பயிற்சியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.

சிறந்த ஆல்ரவுண்ட் கடல் பயிற்சியாளருக்கான தொலைநோக்கி மிட்ஷிப்மேன் சி.பிரனீத்துக்கும், ஒட்டுமொத்த ஆர்டர் ஆஃப் மெரிட்டில் முதலிடம் பிடித்த பைனாகுலர் விருது மிட்ஷிப்மேன் பி.பி.கே.ரெட்டிக்கும் வழங்கப்பட்டது.

பயிற்சி பெற்றவர்களிடையே உரையாற்றிய தலைமை விருந்தினர், மாறிவரும் போர் முறைகள் மற்றும் தந்திரோபாயங்கள், தொழில்நுட்பம் மற்றும் வியூகங்களின் இயக்கவியலுக்கு ஈடுகொடுத்து கடல் சூழலைப் புரிந்துகொள்வதற்கும் அறிவைப் பெறுவதற்கும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வேகம், பாதுகாப்பு மற்றும் மன உறுதியை பராமரிக்கும் அதே வேளையில் ஒரு ராணுவத் தலைவரின் பண்புகளை அவர் எடுத்துரைத்தார். 'தனக்கு முன் சேவை' என்பது எப்போதும் குறிக்கோளாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

11 மே 24 அன்று ஐ.என்.எஸ் டி.ஐ.ஆர் கப்பலில் ஒரு டிவிஷன் நடத்தப்பட்டது, இது தெற்கு கடற்படை கட்டளையின் சி.எஸ்.ஓ (டி.ஆர்.ஜி) ரியர் அட்மிரல் சதீஷ் ஷெனாயால்   மதிப்பாய்வு செய்யப்பட்டது. அதிகாரிகள் இப்போது மேற்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் உள்ள பல்வேறு முன்னணி கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படை ரோந்து கப்பல்களுடன் இணைந்து கடல் பயிற்சியை ஒருங்கிணைப்பார்கள். மொரீஷியஸ் கடலோர காவல்படையின் உதவி கமாண்டர் பிரிஷிதா ஜுகமா  முதல் கடல் பயிற்சியை முடித்த முதல் பெண் பயிற்சி அதிகாரி ஆனார்.

***

AD/PKV/DL



(Release ID: 2020397) Visitor Counter : 60