தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 23 நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் 6 மாநிலங்களில் வாக்கெடுப்பை நேரடியாகப் பார்வையிட்டனர்

பொதுத் தேர்தல் 2024 சர்வதேசப் பாராட்டைப் பெற்றது

Posted On: 09 MAY 2024 7:34PM by PIB Chennai

2024 பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு செயல்முறையை நேரடியாகப் பார்வையிட்ட போது சர்வதேசப் பிரதிநிதிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதிநிதிகளில் சிலர் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டினாலும், மற்றவர்கள் பசுமை வாக்குச் சாவடிகள் போன்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்-ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் உட்பட தேர்தல்களில் தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டதற்குப் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர். ஜனநாயக லட்சியங்களை வலுப்படுத்துவதில் இந்திய வாக்காளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு தங்களை ஈர்த்ததாக பிரதிநிதிகளில் சிலர் கூறினர்.

பொதுத் தேர்தல் 2024-ல் மூன்றாம் கட்டமாக 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் மே 7 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவை பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

கர்நாடகா

கம்போடியா, துனிசியா, மால்டோவா, சீஷெல்ஸ், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கர்நாடகாவின் பெல்காம் நாடாளுமன்றத் தொகுதிக்குச் சென்று வாக்குச் சாவடிக்குள் இருந்த அலுவலர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுடன் உரையாடினர். மாதிரி வாக்குப்பதிவைப் பார்வையிட்டனர். கட்டுப்பாட்டு மையம், ஊடக கண்காணிப்பு வசதிகளையும் பார்வையிட்டனர்.

கோவா

பூட்டான், மங்கோலியா பிரதிநிதிகள் மற்றும் இஸ்ரேலில் இருந்து வந்த ஊடகக் குழுவினர் கோவாவில் உள்ள இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மற்றும் அது தொடர்பான ஏற்பாடுகளை பார்வையிட்டனர். மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகளையும், இளஞ்சிவப்பு நிற வாக்குச் சாவடிகளையும் பார்வையிட்ட பிரதிநிதிகள் வியப்டைந்தனர்.

மத்தியப் பிரதேசம்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 11 பேர் கொண்ட சர்வதேச குழு போபால், விதிஷா, செஹோர் மற்றும் ரைசன் தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு நிலையங்களுக்கு ம் செய்தது.

உத்தரப் பிரதேசம்

சிலி, ஜார்ஜியா, மாலத்தீவுகள், நமீபியா, பப்புவா நியூ கினியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் 2024 மே 7 அன்று உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர் சிக்ரி மற்றும் ஆக்ரா நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு செய்தனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ள தாஜ்மஹால் மற்றும் ஃபதேபூர் சிக்ரியின் கட்டிடக்கலை அற்புதத்தைக் காண வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

குஜராத்

பிஜி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, மடகாஸ்கர், கிர்கிஸ் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் அகமதாபாதில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய ஏற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவு செயல்முறைகளைப் பார்வையிட்டனர். அகமதாபாத் கிழக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சனந்த் சட்டமன்றத் தொகுதியில் பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகள் பாராட்டைப் பெற்றன. இது பெண்களின் நம்பிக்கையையும் பங்களிப்பையும் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

வயதான வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்களுடன் அனைத்து இடங்களிலும் சாய்வு தளம் மற்றும் சக்கர நாற்காலிகள் வசதி மிகவும் பாராட்டப்பட்டது. பார்வையற்ற வாக்காளர்களுக்கான பிரெய்லி வாக்குச்சீட்டு என்ற கருத்தும் வர்களுக்கு உதவும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்பட்டது.

மகாராஷ்டிரா

பங்களாதேஷ், இலங்கை, கஜக்ஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் மகாராஷ்டிராவின் ராய்காட் நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகை தந்தனர்

பின்னணி

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவைக் காண 23 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 2024 மே 5 அன்று புதுதில்லிக்கு வந்தனர். தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்ற தொடக்க அமர்வில் தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார், டாக்டர் சுக்பீர் சிங் சந்து ஆகியோருடன் அவர்கள் கலந்துரையாடினர். அதன்பிறகு பிரதிநிதிகள் 6 சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்றனர்.

***

 

ANU/SMB/AG/KR


(Release ID: 2020218) Visitor Counter : 93