மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சஞ்சய் குமார் தலைமையில் முன்பருவ குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி என்ற பரந்த நோக்கங்களை அடைவதற்கான கூட்டம்

Posted On: 09 MAY 2024 2:55PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் ஆரம்ப கால குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியின் பரந்த நோக்கங்களை அடைவதற்கான கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் தன்னாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு - அடித்தள நிலையின் கீழ் கற்பனை செய்யப்பட்டுள்ளபடி, தடையற்ற மாற்றம் மற்றும் முன்பள்ளி கல்வி மற்றும் பள்ளிக் கல்வியின் தொடர்ச்சி தேவைப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சஞ்சய் குமார், கூட்டத்தின் பின்னணியை அமைத்து, ஒவ்வொரு பங்குதாரரின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும், பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகள் மகிழ்ச்சி அளிப்பதாக திரு குமார் வலியுறுத்தினார்.

அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஒன்றாம் வகுப்பு கொண்ட கேந்திரிய வித்யாலயாக்களில் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு மூன்று பாலர் பள்ளிகள் இருக்க வேண்டியதன் அவசியம் கூட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. கிராமங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுடன் அங்கன்வாடிகளை இணைப்பது, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுடன் ஒருங்கிணைந்து, பரவலாக்கப்பட்ட முறையில் முறையான முன்பள்ளிக் கல்வியைப் பெறுவதற்கும், முதல் வகுப்புக்கு சுமூகமாக மாறுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

பாலர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளருக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

***

(Release ID: 2020072)

PKV/KPG/KR


(Release ID: 2020083) Visitor Counter : 107