நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பதினாறாவது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகள் / கருத்துக்களை வரவேற்கிறது

Posted On: 08 MAY 2024 4:23PM by PIB Chennai

பதினாறாவது நிதி ஆணையம் விதிமுறைகள், பின்பற்றக்கூடிய பொதுவான அணுகுமுறை குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பரிந்துரைகள் / கருத்துக்களை வரவேற்கிறது. அத்துடன் பதினாறாவது நிதிக்குழுவின் பணி தொடர்பான வேறு எந்த விவகாரம் குறித்தும் கருத்துக்களை வரவேற்கிறது.

தங்களது ஆலோசனைகளை 16-வது நிதிக்குழுவின் https://fincomindia.nic.in/portal/feedback  இணையதளம் மூலம் 'ஆலோசனைகளுக்கான அழைப்பு' என்ற பிரிவின் கீழ் சமர்ப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.

பதினாறாவது நிதிக்குழு இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி டாக்டர் அரவிந்த் பனகாரியாவைத் தலைவராகக் கொண்டு குடியரசுத் தலைவரால் 2023  டிசம்பர் 31 அன்று அமைக்கப்பட்து. 2026 ஏப்ரல் 01-ம் தேதி தொடங்கி ஐந்து வருட காலப்பகுதியை உள்ளடக்கிய பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று  பதினாறாவது நிதிக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019961

***

AD/IR/AG/KR


(Release ID: 2019971) Visitor Counter : 102