பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவ கமாண்டர்களின் ஆறாவது மாநாடு புனேயில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 07 MAY 2024 4:47PM by PIB Chennai

ராணுவ கமாண்டர்களின் ஆறாவது மாநாடு புனேயில் உள்ள ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் 2024, மே 07 அன்று நடைபெற்றது. ஆயுதப்படை பயிற்சி நிறுவனங்கள், போர் கல்லூரிகளின் தளபதிகள், ஆயுதப்படைகளின் பிற உயரதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்திய ஆயுதப்படைகளில் எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்க எதிர்கால பாதுகாப்பு உத்திகளுக்கான வழிமுறையை வகுப்பது குறித்து விவாதித்தனர்.

தங்களுடைய நுண்ணறிவுகள், நிறுவனங்களில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள படைகளை உருவாக்குவதற்கான திட்டமிடல் குறித்து விவாதித்தனர். வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான முன்னேற்றம், புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான இந்திய ஆயுதப் படைகளின் உறுதிப்பாட்டை இந்த முக்கிய நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019859  

***

AD/IR/RS/KV

 

 


(रिलीज़ आईडी: 2019869) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Odia , Telugu