குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் மே 4 முதல் 8 வரை இமாச்சலப் பிரதேசத்துக்குப் பயணம்
Posted On:
03 MAY 2024 6:54PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 202, மே 4 முதல் 8 வரை இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். தமது பயணத்தின்போது, சிம்லாவில் உள்ள மஷோப்ராவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர் தங்குவார்.
மே 6-ம் தேதி தர்மசாலாவில் இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
மே 7 அன்று, சிம்லாவில் உள்ள கெயிட்டி பாரம்பரிய கலாச்சார வளாகத்தில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார். பின்னர், சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் அளிக்கும் இரவு விருந்தில் அவர் பங்கேற்கிறார்.
*****
PKV/RS/DL
(Release ID: 2019581)
Visitor Counter : 86