குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் அயோத்தி சென்றார்; ஸ்ரீ ஹனுமான் கரி கோயில் மற்றும் பிரபு ஸ்ரீ ராம் கோயிலில் தரிசனம் செய்தார்

प्रविष्टि तिथि: 01 MAY 2024 10:07PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மே 1, 2024) அயோத்திக்கு பயணம் மேற்கொண்டார் .

பிரபு ஸ்ரீராமர் கோவிலில் குடியரசுத்தலைவர் தரிசனம் செய்து ஆரத்தி எடுத்தார். தரிசனத்திற்குப் பிறகு, குடியரசுத்தலைவர் வெளியிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவில், பிரபு ஸ்ரீ ராமரின் தெய்வீக குழந்தை வடிவத்தைக் காணும் பாக்கியம் தமக்குக் கிடைத்தது என்று கூறியுள்ளார். ராமர் கோயில் இந்திய சமூகம் மற்றும் கலாச்சாரக் கொள்கைகளின் துடிப்பான சின்னமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ராமர் கோயில் அனைவரின் நலனுக்காக பணியாற்ற மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ள அவர், பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதங்களை நாடியதுடன், அனைத்து மக்களின் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக, ஸ்ரீ ஹனுமான் காரி கோயிலுக்குச் சென்ற குடியரசுத்தலைவர், தரிசனம் மற்றும் ஆரத்தி மேற்கொண்டார். ராமர் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு சரயு நதியின் படித்துறை ஆரத்தியிலும் அவர் கலந்து கொண்டார்.

குபேரக் குன்றில் பூஜை செய்த குடியரசுத்தலைவர், தெய்வீக, மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் மத்தியில் கூட்டாக அக்கறை செலுத்துவதன் அடையாளமாக நமது பாரம்பரியத்தில் போற்றப்படும் தேவலோகப் பறவையான ஜடாயுவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

----

(Release ID: 2019384)

PKV/KPG/RR


(रिलीज़ आईडी: 2019398) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu