வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்

Posted On: 01 MAY 2024 4:44PM by PIB Chennai

உள் புகார்கள் குழுவின் தலைவரும், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின்  இணைச் செயலாளருமான திருமதி அனுராதா எஸ். சாக்தி,  அனைத்து பெண் ஊழியர்கள், விஞ்ஞான் பவன் இணைப்பு வளாகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோருடன் தற்காப்பு உத்திகள் உள்ளிட்ட பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு அமர்வை நடத்தினார். குழுவின் வெளிப்புற உறுப்பினர் திருமதி வைஷாலி தூத்-தும் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார். தூத் ஸ்த்ரீபால் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாவார். அவர் ஒரு மூத்த தற்காப்பு பயிற்றுவிப்பாளர் மற்றும் டேக்வாண்டோ தற்காப்பு கலைகளில் 4-வது டிஏஎன் பிளாக் பெல்ட் சாதனையாளர் ஆவார்.

தற்காப்புக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூத், ஒவ்வொரு பெண்ணும் தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு பயிற்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தத் திறன்கள் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதுடன் மட்டுமல்லாமல், பெண்கள் மற்றவர்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன என்று அவர் எடுத்துரைத்தார்.

***

(Release ID: 2019324)

PKV/RS/RR


(Release ID: 2019340) Visitor Counter : 77