கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் அமிர்த கால தொலைநோக்குத் திட்டம் 2047-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடல்சார் துறையின் முழுமையான வளர்ச்சியை வலியுறுத்தும் 'உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கப்பல் கட்டுவதில் சவால்கள் மற்றும் வருங்கால தீர்வுகள்' என்ற தலைப்பில் கொச்சியில் மாநாடு நடைபெற்றது

Posted On: 26 APR 2024 2:28PM by PIB Chennai

மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம், இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து அண்மையில் கேரள மாநிலம் கொச்சியில் (ஏப்ரல் 23-24 ) 'உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கப்பல் கட்டுவதில் சவால்கள் மற்றும் வருங்கால தீர்வுகள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.

நான்கு நுண்ணறிவு அமர்வுகளைக் கொண்டிருந்த இந்த மாநாடு, கடல்சார் தொழில்துறையை கார்பன் நீக்கம் செய்வதில் கவனம் செலுத்தியதுடன், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுவதில் முக்கியமான சவால்கள் குறித்து விவாதித்தது. மாநாட்டில் பங்கேற்பாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பகிர்ந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதோடு, நீர்வழிகளுக்கு சரக்கு முறையை விரைவாக மாற்றுவதற்கு அரசின் சாத்தியமான தலையீடுகளை பரிந்துரைத்தனர்.

மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ஆர். லட்சுமணன் கூறுகையில், "உள்நாட்டு நீர்வழிப் பாதைகளில் பசுமை மாற்றம், பிரத்யேக துறைசார் கடல்சார் மேம்பாட்டு நிதியை உருவாக்குதல், உள்நாட்டு கப்பல் கட்டுவதை ஊக்குவித்தல் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய முன்னுரிமைகளை உள்ளடக்கிய வளமான விவாதங்களுக்கு கொச்சியில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு வெற்றிகரமாக வழிவகுத்தது. கடல்சார் அமிர்த காலப் பார்வை 2047 இல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் கடல்சார் பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்வதற்காக அமைச்சகம் நடத்தும் இதுபோன்ற பல கூட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று கூறினார்.

பிற்பகல் அமர்வு இந்தியாவின் கப்பல் துறையின் அவசர நிதி தேவைகளை ஆராய்ந்தது, கடல்சார் அமிர்த கால தொலைநோக்கு 2047-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி சுமார் 70-75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நாட்டின் திட்டமிடப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதார விரிவாக்கத்தை ஆதரிக்க இந்த கணிசமான தேவை இருந்தபோதிலும், வங்கி கடன் மற்றும் வெளிநாட்டு முதலீடு உட்பட வரவிருக்கும் நிதி ஆதாரங்கள் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்திய கடல்சார் பங்குதாரர்கள், குறிப்பாக கப்பல் துறையில் எதிர்கொள்ளும் பல்வேறு நிதி சவால்களை இந்த விவாதம் விளக்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2018918

***

PKV/RS/KV

 


(Release ID: 2018925) Visitor Counter : 90