எரிசக்தி அமைச்சகம்
பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்புக்காக சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம் நிறுவனத்திற்கு 15-வது மஹாராஷ்டிராவின் நகர மற்றும் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் விஸ்வகர்மா விருது -2024 வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
05 APR 2024 2:22PM by PIB Chennai
கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கவுன்சில் நிறுவியுள்ள 15-வது மஹாராஷ்டிராவின் நகர மற்றும் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் விஸ்வகர்மா விருதுகள் இரண்டினை சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம் நிறுவனம் (எஸ்.ஜே.வி.என்) வென்றுள்ளது.
இந்த விருதுகள் குறித்துப் பேசிய எஸ்.ஜே.வி.என் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், சி.எஸ்.ஆர் அறக்கட்டளையின் தலைவருமான திருமதி கீதா கபூர், புதுமையான மற்றும் நிலையான பெருநிறுவன சமூகப் பொறுப்பு (சி.எஸ்.ஆர்) முன்முயற்சிகள் மூலம் நேர்மறையான மாற்றத்திற்கு தங்கள் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன என்றார். நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.
புதுதில்லியில் உள்ள இந்தியா ஹபிடாட் சென்டரில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஜே.வி.என் சார்பாக தலைமைப் பொது மேலாளர் (மனிதவளம்) திரு பல்ஜீத் சிங் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
***
(Release ID: 2017217)
AD/SMB/RS/RR
(रिलीज़ आईडी: 2017231)
आगंतुक पटल : 204