நிதி அமைச்சகம்

பொதுவான வருமான வரிக் கணக்குகளை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான செயல்பாடுகள், 2024 ஏப்ரல் 1, அன்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் தொடங்கப்பட்டுள்ளது

Posted On: 04 APR 2024 7:50PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியம், 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்ரல் 1, 2024 முதல் தாக்கல் செய்ய வசதி செய்துள்ளது. வரி செலுத்துவோரால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஐடிஆர் படிவங்கள் அதாவது ஐடிஆர்-1, ஐடிஆர்-2 மற்றும் ஐடிஆர்-4, ஆகியவற்றின் வாயிலாக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தில் உள்ளன.

ஐடிஆர் 3, 5 மற்றும் 7 ஆகியவற்றின் மூலம் தாக்கல் செய்வதற்கான வசதியும் விரைவில் கிடைக்கும்.

புதிய நிதியாண்டின் முதல் நாளிலேயே வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித் துறை உதவியுள்ளது. இது இணக்கத்தை எளிதாக்குதல் மற்றும் தடையற்ற வரி செலுத்துவோர் சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை  நோக்கிய மற்றொரு முன்னேற்றமாகும்.

வருமான வரி கணக்குகள் இணையதளப் பக்கம்: https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login

***

ANU/SM/PLM/KPG/DL



(Release ID: 2017197) Visitor Counter : 638