சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் (ABHA) பற்றிய விளக்கம்

Posted On: 04 APR 2024 12:28PM by PIB Chennai

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் (ABHA) என்பது இந்தியாவின் முதன்மை தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் (AB-PMJAY) ஒருங்கிணைந்த அங்கமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பணமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பான நிதி அம்சங்களை நிர்வகிக்கும் வகையில் சுகாதாரக் கணக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்:

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு (ABHA) என்பது ஒரு நபரின் அனைத்து சுகாதார பதிவுகளையும் இணைக்க பயன்படுத்தப்படும் கணக்கு எண்ணாகும். இத ஒரு டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை உருவாக்குகிறது.

குறிக்கோள்:

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த தடையற்ற மற்றும் திறன் வாய்ந்த நிதிக் கட்டமைப்பை வழங்குவதை ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்குகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இது வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை உறுதி செய்கிறது.

முக்கிய அம்சங்கள்:

ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை, மின்னணு சுகாதார பதிவுகள், இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் சேவைகளைப் பெறும் தன்மை, உடனடி தகவல் கண்காணிப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். 

முக்கிய தன்மைகள்:

பயனாளிகளுக்கு தனிப்பட்ட அடையாளம், சிறந்த மற்றும் பாதுகாப்பான நிதி மேலாண்மை, விரைவான உரிமை கோரல் தீர்வுகள், தணிக்கை மற்றும் கண்காணிப்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.

பலன்கள்:

நிதி பாதுகாப்பு, திறன் வாய்ந்த சுகாதார சேவை வழங்கல், தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் 14 இலக்க எண் போன்றவற்றின் மூலம் உடல்நலம்  தொடர்பான தகவல்களை எங்கிருந்தும் சிரமமின்றி அணுகவும் பகிரவும் முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017129

----

ANU/SM/PLM/KPG/KV



(Release ID: 2017145) Visitor Counter : 118